அதிகாரத்திற்கு வரும் தலைர்கள் சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் – ஜனாதிபதி!!

சுற்றாடலை பாதுகாக்கும் உறுதி மொழி, தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படாது, அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு, அதிகாரத்திற்கு வருகின்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற, சுற்றாடல் முன்னோடிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுற்றாடலை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு. காடுகளை பாதுகாத்தல், மரம் நடுதல் மற்றும் சுற்றாடல் மீது கரிசனை கொள்ளுதல், மரம், செடி கொடிகள், உயிரினங்கள் உட்பட பூமித் தாயை நேசிப்பது, அதனை வளப்படுத்துவது, மனிதர்கள் என்ற வகையில் எம்மீதுள்ள அடிப்படை பொறுப்பும் கடமையுமாகும்.

அதேபோன்று தான் வாழும் சூழல், மரம், செடி கொடிகள் மற்றும் உயிரினங்களை பாதுகாப்பதற்கு, பிள்ளைகளுக்கு சிறுபராயம் முதல் பயிற்றுவிக்க வேண்டியது அவசியமாகும்.

சுற்றாடலை நேசிக்கும் தலைவர் என்ற வகையில், சுற்றாடலை பாதுகாப்பதற்காக, நான் கடந்த 5 வருட காலப்பகுதியில் முக்கியமான பல பணிகளை மேற்கொண்டிருக்கின்றேன்.

சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக வரலாற்றில் முதன் முறையாக முப்படையினரையும் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தேன். என குறிப்பிட்டார்.

சுற்றாடல் முன்னோடிகளுக்கு, ஜனாதிபதி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையின் எதிர்கால தலைமுறையினரை, சூழல் நேயமிக்க பிரஜைகளாக சமூகமயப்படுத்தி, தாய் நாட்டின் அழகிய சுற்றாடல் மரபுரிமையை, எதிர்கால தலைமுறைக்கு கையளிக்கும் முக்கிய நோக்குடன், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால், கல்வி அமைச்சின் முழுமையான அனுசரணையுடன், தேசிய சுற்றாடல் முன்னோடிகள் நிகழ்ச்சித்திட்டம், நாட்டின் பாடசாலை முறைமையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

40 சுற்றாடல் முன்னோடிகளுக்கு, ஜனாதிபதி பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.

‘சுற்றாடலை பாதுகாப்பதில் சூழல் கல்வியின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில், கொழும்பு பல்கலைக்கழக தாதியர் கல்விப் பிரிவின் பதில் பீடாதிபதி பேராசிரியர் தேவக வீரகோனினால், விசேட உரை நிகழ்த்தப்பட்டது.

2019 சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் அணிவிப்பு நிகழ்வை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட, நினைவு சஞ்சிகையும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவர் இசுற தேவப்பிரிய, மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!