ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலை, நூற்றாண்டு நிறைவு விழா, நாளை!!

யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்திலுள்ள, ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலை நூற்றாண்டு நிறைவு விழாவை, நாளை கொண்டாடப்படவுள்ளது.

நூற்றாண்டு நிறைவு விழா, நாளை பிற்பகல் 1.00 மணிக்கு, வித்தியாசாலை கந்தசாமி அரங்கில், அதிபர் க.கெங்காதரகீர்த்தி தலைமையில் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து, எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், பிற்பகல் 3.00 மணி முதல், நூற்றாண்டு விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கல், பல்வேறு பிரமுகர்களின் உரைகள், நூல் வெளியீடுகள், இறுவெட்டு வெளியீடுகள், மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆகியன இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையில் இடம்பெறும் நிகழ்வில், அனைவரையும் பங்கேற்குமாறு, ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!