இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் மீது, கத்திக்குத்து!!

இந்தோனேசியாவின் உயர் பாதுகாப்பு அமைச்சர் விரான்டோ, ஐ.எஸ் ஆதரவாளர்கள் என கருதப்படுபவர்களால் கத்திக்குத்திக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜாவாவின் பன்டெக்லாங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயர் பாதுகாப்பு அமைச்சர் விரான்டோ, அவரது வாகனத்திற்கு அருகில் வைத்து கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தையும் அமைச்சர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் சந்தேக நபர் ஒருவருடன் மல்லுக்கட்டுவதையும் வீடியோ காண்பித்துள்ளது. அமைச்சருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர், இராணுவ வீரர் உட்பட வேறு சிலரும் காயமடைந்துள்ளனர் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் தம்பதியினரை, சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஆயுதங்களை மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதியில் பல்கலைகழகம் ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்ற அமைச்சர், அங்கிருந்தவர்களுடன் கைகுலுக்கி உரையாடிக் கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நபர் ஒருவர் மீதே, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், அவருடன் கைது செய்யப்பட்ட பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!