தமிழ் மக்களிடையே படையினர் நல்லிணக்கத்துடன் செயற்படுகின்றனர் – சவேந்திர சில்வா!!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களை எதிர்கொள்ள, இராணுவத்தை பலப்பத்துவதே தனது எதிர்பார்ப்பு என, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 70 ஆவது நிறைவாண்டு விழாவில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘இராணுவத்தின் தலையாயக் கடமையான நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்பு செய்வோம்.

அதனூடாக அச்சம், சந்தேகமின்றிய சமூகத்தைக் கட்டியெழுப்ப சந்தர்ப்பம் கிடைக்கும். அதற்கமைய நாடு என்ற வகையில் எதிர்பார்க்க முடியாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான அறிவு, திறமை, தொடர் பயற்சியின் ஊடாக எமது படையினரை பலப்படுத்த வேண்டும். அதற்காக படையினர் அனைவரும் தயாராகவும் வேண்டும்;.

நூதன யுகத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை அடையாளங் கண்டு கொள்ளவும், அவற்றிற்கு எதிர்கொள்ளவும் பலம் வாய்ந்த இராணுவத்தை அமைப்பதே எனது விசேட நோக்காக உள்ளது.

இராணுவத்தினரின் நலன்புரி விடயங்களையும், தொழிற்துறை நலன்களையும் அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கின்றேன்.

நாட்டிற்குள் ஏற்படுகின்ற எதிர்பாராத இயற்கை அனர்த்தங்களின் போது, நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபடவும் மக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவரவும் இராணுவத்தினரால் வழங்கப்படுகின்ற அர்ப்பணிப்புச் சேவையை பாராட்டுகின்றேன். அவற்றை தொடர்ந்தும் அமுல்படுத்தவும் எதிர்பார்க்கின்றேன்.

ஒட்டுமொத்த மக்களும் சகோதரத்துடனும், நாட்டின் பாதுகாப்பிற்காக இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற இணைப்பு முனையாக, எமது படைத் தலைமை அதிகாரிகளை சுட்டிக்காட்டலாம்.

எமது படையினர் சிவில் மக்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகின்றனர். போர் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றல் மற்றும் சுகாதார சேவைகளுக்காக வைத்தியசாலை நிர்மாணம், வீடுகள் நிர்மாணம், வடிகாலமைப்பு, குருதிக்கொடை மற்றும் சிரமதானங்கள் ஆகிய பணிகளின் ஊடாக சிவில் மக்களுடன் பலமான நட்புறவைக் கட்டியெழுப்ப எங்களால் முடிந்தது’ எனத் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் 70 ஆவது நிறைவாண்டு விழா, இலங்கை இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்ட, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில், கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.

இராணுவத்தின் வரலாற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும், சகல விதமான படை அணிவகுப்பு சாகசங்கள், இன்றைய விழாவின் ஆரம்பத்தில் இடம்பெற்றன.

அதன் பின்னர் இராணுவத்தளபதிக்கு மரியாதை செலுத்தும் அணி வகுப்பும் இடம்பெற்றது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!