உலகில் முன்னணி நாடாக இலங்கை மாறும் – சஜித்!!

உலக நாடுகளுக்கு மத்தியில், இலங்கை முதற்தர நாடாக மாற்றப்படும் என, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதன் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம், விவசாயம், அபிவிருத்தி, தொழில்நுட்பம். அனைத்தையும் கொண்ட ஒரு முதற்தர நாடாக இந்த நாட்டை நான் கட்டியெழுப்புவேன்.

இதற்கு அனைத்து தரப்பினரிமும் இருந்து உதவிகள் பெற்றுக்கொள்வேன்,  ஊழல் செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்களுக்கு என்னிடம் இடமில்லை.

அரச சொத்துக்களை தனிநபர்களின் தேவைக்காக பயன்படுத்த விடமாட்டேன், யாராவது கொள்ளையடிக்கும் எண்ணத்துடன் எங்கள் அரசுடன் இணைத்தால் அவர்களை உடனடியாக நான் விரட்டியடித்துவிடுவேன்.

நாங்கள் கொள்ளையடிப்பதற்காவும், ஊழல் செய்வதற்காகவும் ஆட்சிக்கு வரவில்லை, மக்களுக்காக சேவை செய்ய தான் ஆட்ச்சிக்கு வருகின்றோம்.

மக்கள் அதற்காகத்தான் எங்களை நியமிக்கின்றர்கள், என்னிடம் யாரையும் ஏமாற்றும் என்னும் திட்டம் இல்லை, அதேபோல நாம் நாட்டின் இளைஞர்களுக்கு அனைத்து தரப்பிலும் உதவி செய்து இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டி அதற்கான உதவிகளை நாம் செய்வோம்.

அதேபோல சரத் பொன்சேகா நாட்டை பாதுகாக்கும் கடமையில் இறங்க வேண்டும், நாட்டின் தேசிய பாதுகாப்பை சரியான முறையில் அவர் கையில் எடுக்கவேண்டும், நாட்டில் போதைப்பொருளை தடைசெயய் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதனால் அவரின் உதவி இதற்கு மிக முக்கியம்.

வரி சுமைகள் குறைக்கப்படும், அதுபோல சமுர்த்தியுடன் இணைந்ததாக மக்களுக்கு மேலதிக கொடுப்பனவு பொதி வழங்கப்படும், விவசாயிகளுக்காக சலுகைகளை வழங்கள் கூடிய ஜனாதிபதி குழுவொன்று நியமிக்கபப்டும்.

அரச சேவையாளர்கள் சரியான முறையில் மக்களுக்கு சேவைகளை வழங்கக் கூடிய முறையில் அனைத்து திட்டங்களும் கையாளப்படும்.

மதங்களை பாதுகாக்க முக்கியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும், அதேபோல நான் பயணிக்கும் இந்த பயணம் புதிது.

நாம் மக்களிடம் ஒன்றை கேட்கவேண்டும் லசந்த, ஏக்நொலிகொட போன்று இல்லாமல் போக வேண்டுமா? தண்ணீர் கேட்டு வீதிக்கு இறங்கும் போது வெடி வைக்கட்டது அந்த காலம் மீண்டும் தேவையா? அதை மக்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும்.

நான் குடும்பத்தவர்கள் ஒன்றித்து ஒரு அறையில் முடிவெடுத்து ஜனாபதி தேர்தலில் போட்டியிட வந்தவன் அல்ல மக்களுடன் போராடி ஒன்றிணைத்து இந்த ஜனாபதி தேர்தலில் போட்டியிட வந்தவன். என குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!