தேர்தலில் விதி மீறுவோருக்கு எதிராக, பாரபட்சமின்றி முறைப்பாடு செய்யலாம்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும், நீதியானதாகவும் வன்முறையற்ற தேர்தலாகவும் நடாத்தி முடிப்பதற்காக அனைத்து தரப்பினரும் உதவுமாறு, தேர்தல் திணைக்களம் வேண்டுகோள் விடுள்ளதுடன், தேர்தல் சட்ட விதிகளை மீறுவோர்க்கு எதிராக பாராபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச தேர்தல் முறைப்பாட்டு நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக, அம்பாறை மாவட்டத்தின் பிரதேச தேர்தல் முறைப்பாட்டு நிலையத்திற்கான தேர்தல் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் எம்.ஏ.சி.அகமட் நஸீல் தெரிவித்தார்.

தேர்தல் சட்ட விதிகளை மீறுவோர் தொடர்பில் அனைவரும் பிரதேச மட்ட தேர்தல் முறைப்பாட்டு நிலையத்தில் அதற்கான படிவங்களைப் பெற்று அல்லது ஒவ்வொரு நிலையத்திற்கும் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகள் தெரிவிக்க முடியும்.

இதற்காக தேர்தல் ஆணைக்குழவினால் அம்பாறை மாவட்டத்தில் இம்மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் இறுதி வரையில் இயங்கும் வகையில் நான்கு தேர்தல் முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான தேர்தல் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் லகுகல பிரதேச செயலாளர் பிரிவு, பொத்துவில் மற்றும் திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய ஆறு பிரதேச செயலகப் பிரிவிற்கான தேர்தல் முறைப்பாட்டு நிலையம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவுகளில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து அரசாங்க ஊழியர்களின் இடமாற்றம், தேர்தல் பிரசார பதாதைகள், அரசியல் கட்சகளின் கொடிகள் காட்சிப்படுத்தி வைத்திருந்தமை, வாழ்வாதார உதிவகள், அன்பளிப்புகள் வழங்கியமை போன்ற ஐந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 13 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரச வாகனங்களை தேர்தல் நடவடிக்கைக்காக பாவிக்கின்றமை, அரச உத்தியொகத்தர்கள் அரச கடமையின் போது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுதல், அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகளில் அரசியல் கூட்டங்கள் நடத்துதல், நலனுதிவகள், வாழ்வாதார உதிவகள் வழங்குதல், வீதியோரங்களில் கட்சிக் கொடிகள், பெனர்கள், பதாதைகள் காட்சிப் படுத்தல், வன்முறைகளைத் தூண்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் செயலாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!