தென் கிழக்கு பல்கலை, கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் 31 ஆவது நாளை எட்டியது!!

தென் கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பின் 31 ஆவது நாளான இன்று அடையாள போராட்டமாக முன்டெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்க தேவையான சுற்றுநிரூபத்தை வெளியிடல், 45 வீத மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பனவை 75 வீதம் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு சுற்றுநிருபம் வெளியிடப்படாமல் பணிப் பகிஷ்கரிப்பை கைவிடமாட்டோம்; என தென் கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழில் சங்க தலைவர் எம்.எம்.நௌபர் தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!