ஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது தாக்குதல்

ஹொங்கொங்கில் அரச அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகமும் கண்ணீர்ப்புகை தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

முகங்களை மூடியவாறு தலைக்கவசம் அணிந்தவர்கள் அரச அலுவலகங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதற்காக, சந்தேகநபர்களை சீனாவிற்கு அனுப்பும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டங்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இணைந்து கொண்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு தாமதமடைந்தது.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய கலகமடக்கும் பொலிஸார் அவர்களை கலைக்க நீர்த்தாரை பிரயோகமும் கண்ணீர்ப்புகை தாக்குதலும் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!