கைச்சாத்தானது இணக்கப்பாட்டு உடன்படிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை இன்று காலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 10, டி.பி ஜாயாமாவத்தையில் உள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று காலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கட்சி ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபயவுக்கு ஆதரவளிப்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

எனினும் இந்த தீர்மானத்திற்கமைய சில நிபந்தனைகளை உள்ளடக்கி இன்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டுக்கான முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!