வவுனியாவில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு!

வவுனியா நகர்ப்பகுதியில் 24 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிமனையின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கம் குறித்து கருத்து கூறும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா நகரப்பகுதியில் டெங்கு தொற்று அதிகரித்துள்ள நிலையில், 24 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 103 இடங்களில் நுளம்பு பெருக்கக் கூடிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொது மக்களும் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!