காலநிலைக்கு ஏற்ற நீர்பாசன விவசாய அபிவிருத்தி கலந்துரையாடல் மட்டக்களப்பில்!

காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய அபிவிருத்திற்கான கலந்துரையாடல் உலக வங்கியினரால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய அபிவிருத்திற்கான கலந்துரையாடல் மாவட்ட செயலாலரும் அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலாலரின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.

காலநிலைக்கு சீர் அமைவான நீர்பாசன விவசாய அபிவிருத்தி திட்டமானது இலங்கையில் 11 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் முந்தானை ஆறு அணைக்கட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டு திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

இத்திட்டத்திற்காக மொத்தமாக 140மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான விவசாயிகளின் பங்களிப்புக்காக 125மில்லியன் அமெரிக்க டொலர்களும் இலங்கை அரசினுடைய நிதியாக 10மில்லியன் அமெரிக்க டொலர்களுமாக இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 11மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான விசேட வேலைத்திட்டமானது தொடர்ந்து வெள்ளம் வறட்சி இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்ற மாவட்டங்களுக்காகவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்;ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய திட்டத்திற்கு மாவட்டத்தின் பங்குதார்கள் அனைவரையும் இணைந்த வகையில் இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

உலகவங்கியின் மூலம் கால நிலைக்கு சீர்அமைவான நீர்பாசன விவசாய திட்டத்தின் மூலமாக நாட்டு மக்களின் விவசாய உற்பத்தி திறனை மேன்படுத்தி நீர்பாசனம் மற்று விவசாயம் மூலமாக தன்நிறைவை காண்பது தான் இத்திட்டத்தின் முக்கிய கருப்பொருளாக கொண்டு நாட்டை செழிப்புறகட்டி எழுப்புவதாகவே இத்திட்டம் அமைகின்றது.

இத்திட்டத்தின் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் புண்னியமூர்த்தி சசிகலா உலகவங்கி திட்டத்தின் நிபுனர் சி.மனோகரன் திட்டப்பணிப்பாளர் பொறியலாளர் என்.சிவலிங்கம் மற்றும் பிரதி பணிப்பாளர் ர.ம.ஆரியதாச, உலக வங்கி சிரேஸ்ட ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!