முல்லைத்தீவில் தேர்தல் பணிகள் மும்முரம்!

முல்லைத்தீவில் 75ஆயிரத்து 381 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல்கள் ஆணையாளர் கா.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், முல்லைத்தீவில் 75ஆயிரத்து 381 பேர் வாக்களிக்க தகுதி உதவி தேர்தல்கள் ஆணையாளர் கா.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 15 வாக்களிப்பு நிலையங்களில் 5ஆயிரத்து 372 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் 20 வாக்களிப்பு நிலையங்களில் 7ஆயிரத்து 458 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் 20 வாக்களிப்பு நிலையங்களில் 23ஆயிரத்து 626 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 49 வாக்களிப்பு நிலையங்களில் 24ஆயிரத்து 237 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 26 வாக்களிப்பு நிலையங்களில் 11ஆயிரத்து 325 பேரும், மணலாறு பிரதேச செயலகப் பிரிவில் 5 வாக்களிப்பு நிலையங்களில் 3ஆயிரத்து 363 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, 135 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், தபால் மூல வாக்களிப்புக்காக 2ஆயிரத்து 845 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்று ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.

ஆரம்ப கட்ட ஏற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் தொடர்பான ஆளணிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்புகள் இடம்பெற்றுவருகின்றது.

அத்தோடு தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கும் பணிகளும் இடம்பெற்றுவருதாகவும் முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கா.காண்டீபன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!