மட்டு.பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்!

மகாபாரத, இதிகாசத்தை மையமாகக் கொண்ட வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பாண்டவர்கள் திரௌபதை சகிதம் வனவாசம் செல்லும் சடங்கு நேற்று நடைபெற்றது.

மகாபாரத போரை கட்டியம்கூறும் வகையில் 18 தினங்கள் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. இவ் ஆலய உற்சவம் கடந்த 24ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் கொடியேற்றம் இடம்பெற்று ஆரம்பமாகியது.

இந்நிலையில் நேற்றைய தினம் பதினாறாம் நாள் திருவிழாவின் போது, பாண்டவர்கள் வனவாசம் செல்லல், தருமர் வீமருக்கு வாள் மாற்றும் நிகழ்வு அஞ்ஞாதவாசம் செய்தல் ஆகியன நடைபெற்றன.

இந்நிகழ்வில் நாட்டின் பலபாகங்களிலும் இருந்து வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்தர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இன்றைய தினம் அர்ச்சுனன் தவநிலைசெல்லல் காட்சியும், அரவாணைப் பலி கொடுத்தல் என்பன நடைபெறவுள்ளது.

நாளைய தினம் மாலை ஆலய உற்சவத்தின் சிகரம் என போற்றப்படும் பாண்டவர்கள், திரௌபதை, ஸ்ரீகிருஸ்ணர், தேவாதிகள் சகிதம் தீ மிதிக்கும் சடங்கு நடைபெற்று நாளை மறுதினம் சனிக்கிழமை தர்மருக்கு மூடிசூட்டும் சடங்கு, தீக்குழிக்கு பால்வார்க்கும் சடங்கும் இடம்பெற்று பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!