கோட்டா விடயத்தில் அரசாங்கம் தோற்றுவிட்டது – பீரிஸ்!!

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கான பயணம் ஆரம்பித்து விட்டது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ், பொதுஜன பெரமுனவின் வெற்றியை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து அரசியல் சூழ்ச்சிகளும் இன்று தோல்வியடைந்துள்ளது எனக்குறிப்பிட்டார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘பொதுஜன பெரமுனவின் வெற்றியை தடுப்பதற்காக அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னெடுத்த அனைத்து சூழ்ச்சிகளையும் நீதித்துறையின் ஊடாகவே தோற்கடித்துள்ளோம். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு அனைத்து தகுதிகளும் காணப்படுகின்றது. குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களுக்கே இனி மக்கள் ஆணையினை பெற முடியாது.

மக்களுக்கு சேவையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் 30வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த கோத்தபாய ராஜபக்ஷவிற்கு மீண்டும் மக்களாணையினை பெற்று ஆட்சியதிகாரத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து தகைமைகளும் காணப்படுகின்றது.

இனி எவ்வித தடைகளும் கிடையாது. வெற்றிபெறுவதே இறுதியாக காணப்படுகின்றது. நாடு தழுவிய ரீதியில் அனைத்து செயற்திட்டங்களையும் இன்று முதல் முன்னெடுத்து செல்வோம்’. என குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!