தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமின்றி கோட்டாவுக்கு வாக்களிக்கலாம் – துமிந்த!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வரலாற்று காலம் தொடக்கம் ஆதரவு வழங்கிய தமிழ் – முஸ்லிம் மக்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றிக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அனுராதபுரம் நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இனமத வேறுப்பாடு கிடையாது. 2015 ஆம் ஆண்டு சுதந்திர கட்சியின் மீது நம்பிக்கை கொண்டே தமிழ் – முஸ்லிம் மக்கள் நம்பிக்கை கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அன்று வழங்கிய ஆதரவினை நவம்பர் 16 ஆம் திகதியும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வழங்க வேண்டும்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தின் தீர்மானத்திற்கு அமையவே பொதுஜன பெரமுனவுடன் இணைய தீர்மானத்தோம். ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு இரண்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவுள்ளோம்.

அதாவது பொதுஜன பெரமுனவுடன் பரந்துபட்ட கூட்டணி அமைப்பதற்காக முன்னெடுத்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டணி மற்றும் பொதுஜன பெரமுனவுடன் செல்வாக்கு செலுத்தும் கட்சிகளுடனான கூட்டணியும் அமைக்கப்படும்.

அத்துடன் எதிர்காலத்தில் சுதந்திர கட்சி என்ற ரீதியில் மேலதிகமாக இரண்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவுள்ளோம்.’. என குறிப்பிட்டுள்ளார்,(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!