கட்சி சாராத ஜனாதிபதியா கடமையாற்றுவேன் – மகேஷ்

தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானால், எந்தக் கட்சியையும் சாராது சுயாதீனமான ஜனாதிபதியாகவே கடமையாற்றுவேன் என்று, தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு – மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நான் ஓய்வுபெற்றபோது நாட்டுக்காக சேவை செய்திருக்கின்றேன் என்ற மனதிருப்தியுடன் ஓய்வு பெற்றிருந்தாலும், அதன் பின்னர் நாட்டின் நிலைவரத்தை உணர்ந்து இன்னும் இந்நாட்டுக்கு செய்யவேண்டிய சேவைகள் இருக்கிறது என்பதை உணர்ந்துதான் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்தேன்.

தற்போது தேசிய மக்கள் இயக்கத்தில் சுமார் 30 சிவில் சமூக அமைப்புக்கள் எம்முடன் கைகோர்த்திருக்கின்றன. ‘மின்குமிழ்’ சின்னத்திலேயே தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றியாகும். எமது தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த வாரமளவில் வெளியிடப்படும்.
மேலும் நாகநந்தாவுடன் எனக்கு எந்த தனிப்பட்ட சிக்கலும் இல்லை.

அவர் என்மீது குற்றசாட்டுக்கள் முன்வைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவர் எங்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். அவர்தான் முதலில் நாட்டை மாற்ற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர். அவருக்கு எதிராக நான் ஒன்றும் செய்யவில்லை. அவருடைய குற்றசாட்டுக்களை நான் நிராகரிக்கின்றேன்.

மேலும் எமது வேலைத்திட்டங்களை குறித்து மக்களால் அறிந்துகொள்ள முடியும்’ என்றும் குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!