தேர்தல் முறைப்பாடுகள் இதுவரை 31 பதிவாகியுள்ளது – பெப்ரல் அமைப்பு!!

35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை தேர்தல் முறைப்பாடுகள் 31 பதிவாகியுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘அரச சொத்துக்கள் மற்றும் அரச நிதிகளை பயன்படுத்தி நியமனங்கள் வழங்குவது தொடர்பாக அடிக்கடி முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
அதேபோல மக்களுக்கு அன்பளிப்பு பொருட்களை சில காட்சிகள் வழங்குவது தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

கண்காணிப்பு அமைப்பு ஒன்று என்ற அடிப்படையில் நாம் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் ஒருநாட்டின் தலைவராக வருவதற்காக போட்டியிடுகின்றீர்கள்.

எனவே அதன் தன்மை, தகைமையை காத்துக்கொண்டு போட்டியிடுங்கள். அதற்கான தகைமை உங்களுக்கு உள்ளது என்று மக்களுக்கு காண்பியுங்கள். மேலும் சமாதானமான நீதியானதொரு தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்குங்கள்’ என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!