அம்பாறையில், கஜ முத்துக்களுடன் இருவர் கைது!!

அம்பாறை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் அருகில் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 8 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 30 வயதுடைய அலிப்தம்பி முஹமட் ஹஸ்னி, 39 வயதுடைய மீரா முகைதீன் முகமட் சலீம் ஆகியோர் 3 கஜமுத்துக்களுடன் கைதாகியுள்ளனர்.

இச்சுற்றிவளைப்பின்போது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன், சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப், கான்ஸ்டபிள்களான நவாஸ, கீர்த்தனன், அமலதாஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கஜமுத்துக்கள் 1 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியானது என்றும் அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் இவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!