அம்பாறை காரைதீவில், தேசிய மரநடுகை நிகழ்வு!!

இலங்கையின் சூழல் தொகுதியைப் பாதுகாத்து, வன அடர்த்தியை அதிகரித்து பசுமை நிலையை அதிகரிக்கும் நோக்கில் சுற்றாடல் விடயம் சார் அமைச்சரான ஜனாதிபதியுடைய எண்ணக்கருவில், ‘வன ரோபா’ தேசிய மரநடுகை நிகழ்வு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் செயல்படுத்தப்படுகின்றது.

அதன் ஒரு அங்கமாக அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலகமும், இராணுவத்தினரும் இணைந்து இன்று காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

பாடசாலை அதிபர் டி.வித்தியராஜன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

தேசிய மரநடுகை நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன், விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட 241 பிரிகேட் கமாண்டர் கர்னல் விமலரத்ன, சிறப்பு அதிதியாக கொமாண்டிங் ஆபிஸர் மேஜர் தர்மசேன மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பாடசாலை ஆசிரியர்களும், படைவீரர்களும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!