கோட்டா வந்தால் நாட்டில் இராணுவ ஆட்சியே – சமீர பெரேரா!!

கோட்டபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இராணுவ ஆட்சி நிச்சயம் வரும். மக்கள் மிகவும் கஷ்டப்படப் போகின்றார்கள் என்று தேசிய மக்கள் சபையின் ஏற்பாட்டாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘நாம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நாடு இராணுவ ஆட்சியின் கீழ் சென்றுவிடும்.
ஜனநாயகம் இல்லாமல் போய்விடும்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு சாதகமான முன்னாள் இராணுவத் தலைவர்கள் சில நிகழ்வுகளின்போது நிகழ்த்திய உரைகளை நாம் கேட்டிருக்கினறோம்.
நாடு இனவாதத்தை நோக்கிச் செல்லும். அதுபோல அண்மையில் கோட்டாபய ராஜபக்ச வியாபாரிகளை சந்தித்தபோது அவரின் உரை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

இன்னும் ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனத்தை பார்க்கவில்லை. இருந்தாலும் அவர்கள் சூழ உள்ளவர்களை பார்க்கின்றபோது அது எவ்வாறு அமையும் என்று நன்றாக புரிகின்றது.

அதற்கான சிறந்த எடுத்துக்காட்டுத்தான் அண்மையில் மதுமாத அரவிந்த கூறிய கருத்துக்கள். மக்கள் ஜனநாயகம் கேட்டால் என்ன செய்வோம் என்று அவர்கள் ஆட்சிக்கு வரமுன்னமே கூறிவிட்டார்கள், இந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகமாக ஊழல் தொடர்பாகவும், வேறு குற்றங்கள் தொடர்பாகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இன்றும் விசாரணை செய்துகொண்டிருக்கின்ற ஒரே ஒரு வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச மாத்திரமே,
அவருடைய குணம், அரசியல் கலாசாரம் என்பன அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

எனவே மக்கள் இதனை மாற்றவேண்டும் இப்படியான ஒருவர் இந்தநாட்டை ஆட்சிசெய்ய முடியுமா’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!