மனைவி, மகனுக்காக தன் உயிரை தியாகம் செய்த குடும்பஸ்தர் : திருமலையில் சோகம்!!

திருகோணமலையில், பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பகுதியில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர், நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – அபயபுர, ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய என்.ஜோஹான் ஜோசப் எனும் குடும்பஸ்தரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் குழந்தை, ரயில் தண்டவாளத்துக்குச் சென்றபோது அவரைப் பிடிப்பதற்காக, அவரது மனைவியும் தண்டவாளத்துக்கு அருகே சென்றதாகவும், மகனையும், மனைவியையும் காப்பாற்றுவதற்காகச் சென்ற கணவர், ரயிலுடன் மோதியதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!