மட்டு,களுதாவளை கடல் பகுதியில் காணாமல்போன சிறுவன்: தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடல் பகுதியில் நேற்று மாலை குளிப்பதற்காக சென்று காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கடலில் காணாமல் போன இளைஞன் களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம் டிலான்ஷன் என தெரியவந்துள்ளது.

நேற்று மாலை களுதாவளையைச் சேர்ந்த 5 சிறுவர்கள் கடற்கரைக்குச் சென்று விளையாடிவிட்டு குளித்துக் கொண்டிருக்கும்போது அருகில் நின்று குளித்துக் கொண்டிருந்த தமது நண்பன் கடலலையில் அள்ளுண்டுபோவதை சக நண்பர்கள் அவதானித்துள்ளனர்.

பின்னர் அருகிலுள்ள கடற்படையினரிடம் அறிவித்துள்ளனர் உடன் ஸ்தலத்திற்கு விரைந்த கடற்படையினரால் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறு கடலில் அள்ளுண்டுபோன சிறுவனை மீனவர்களும், கடற்படையினரும் தொடர்ந்து கடலில் தேடி வருகின்றனர்.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!