ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 10,000 தேர்தல் கண்காணிப்பாளர்கள்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 10 ஆயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெறும் என்று கூறினார்.

தேர்தல் காலப்பகுதியில் அரச சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தொடர்பிலும் இம்முறை விஷேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!