ஹற்றன் – டிக்கோயா போடைஸ் தோட்ட மக்கள்: 02ஆவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம்     

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா, போடைஸ் 30 ஏக்கர் தோட்ட மக்கள் இரண்டாம் நாளாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த தோட்ட வைத்தியசாலையில் இருந்து ஹற்றன், டயகம பிரதான வீதி வரை பேரணியாக சென்று வீதியின் ஓரத்தில் போடைஸ் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடமைப்பு திட்டத்தை உடனடியாக மேற்கொண்டு தருமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மலையக அரசியல்வாதிகள் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாகவும், தாங்கள் பத்து மாதங்களாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மழையுடனான காலநிலை நிலவி வருவதன் காரணமாக தாம் வாழும் கூடாரத்தில் பாம்பு, அட்டை மற்றும் தவளை என்பவற்றின் நடமாட்டம் காணப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை தமது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்காவிடின் சாகும் வரை உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுப்பட போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!