காயத்தில் இருந்து மீள்கின்றார் ஹார்த்திக் பாண்டியா   {காணொளி இணைப்பு}

இந்திய கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் ஹார்த்திக் பாண்டியா, முதுகுவலிக்கு அண்மையில் சத்திர சிகிச்சை செய்துகொண்ட நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வரும் காணொளிப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியா, தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியின் பின்னர் முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டார்.

நீண்ட நாட்களாக இருந்து வரும் இந்த பிரச்சினை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினர், ஹார்த்திக் பாண்டியா சத்திர சிகிச்சை மேற்கொள்வதே சரியான தீர்வாக அமையும் என சிபாரிசு செய்தனர்.

இதனையடுத்து லண்டனில் தனது காயத்திற்கு சத்திர சிகிச்சையை கடந்த 4ஆம் திகதி மேற்கொண்டார்.

இந்நிலையில், சிகிச்சையின் பின்னர் மீள பழைய நிலைக்க திரும்பும் காணொளி ஒன்றினை ‘சிறுகுழந்தையின் நடைகள்…’ என வர்ணித்து தனது சமூகவலைத்தளம் ஒன்றில் பதிவேற்றியுள்ளார்.

இக் காணொளி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், பாண்டியா மீள பழைய நிலைமைக்கு திரும்பி போட்டிகளில் பங்கொள்ள வேண்டும் என்ற ஆதரவைனயும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!