அமெரிக்க குழு இலங்கைக்கு விஜயம்     

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், முகமாலை மற்றும் பளை பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை கண்காணிப்பதற்காக அமெரிக்க அரச பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நிறுவனம் ஒன்று குறித்த பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பளை பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களை அமைத்திருந்ததால் குறித்த பிரதேசங்களில் அதிகளவான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக கண்ணிவெடி அகற்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் காணிகள் மற்றும் மக்கள் முன்னர் குடியிருந்த பகுதிகளில் தற்சமயம் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பிரதிநிதிகளின் இந்த கண்காணிப்பு விஜயத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!