கிளிநெச்சி-கல்லாறு பகுதி: பாதுகாக்குமாறு கிளி – கல்லாறு மக்கள் கோரிக்கை   

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மணல் கடத்தல்கள் அதிகரித்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இடம்பெறும் சம்வங்களில் மணல் அகழ்வு முதல் இடத்தில் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லாறு உட்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்த நிலையில் கல்லாறு பகுதியில் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்வதற்கான அனுமதியை தனியார் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ள பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான அதேவேளை, பறவைகள் சரணாலயமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த பகுதியில் சுமார் 5 அடிக்கு மேல் தோண்டப்பட்டு மணல் அகழ்வு இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது மணல் அகழ்விற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் நாளாந்தம் பயன்படுத்தப்படும் வீதி மற்றும் பாலம் என்பன சேதமடைவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு அருகில் கடல் காணப்படுவதால் மணல் அகழ்வதனால் குடிநீருடன் உவர் நீர் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இவற்றை கருத்தில் கொண்டு கல்லாறு கிராமத்தை பாதுகாத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!