தூக்கில் தொங்கிய சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிகண்டி தெற்கில், சகோதரி பூமாலை கட்டும்போது, அதற்கு இடையூறு விளைவித்த மகனை தாய் தண்டித்ததையடுத்து சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவத்தில் பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த 12 வயதுடைய ரவி ரஹிம்சன் எனும் சிறுவனே உயிரிழந்தவராவார்.

சிறுவனின் இளைய சகோதரி பூமாலை கட்டிக்கொண்டிருந்தபோது குறித்த சிறுவன் இடையூறு விளைவித்ததாகவும், இதானல் இளைய சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கம் இடையிலான மோதலை தவிர்க்கும் முகமாக மகனை தாயார் தண்டித்த நிலையியேலே அருகில் உள்ள வீடொன்றில், தற்கொலை செய்வதற்கு சிறுவன் முயன்றுள்ளான்.

இதன்போது குடும்பத்தவர்களால் சிறுவன் மீட்கப்பட்டு, வல்வெட்டித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறுவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!