இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானம்  

இந்திய விமானப்படைக்கு கொள்வனவு செய்யப்படவுள்ள 36 ரஃபேல் போர் விமானங்களில்,முதல் விமானத்தை இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்று கொண்டார்.

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றுள்ள நிலையில் நேற்றைய தினம் முதல் விமானத்தை பெற்று கொண்டார்.

இதனை அடுத்து ரஃபேல் விமானத்தில், ‘சாஸ்த்ர பூஜா’ எனப்படும், ஆயுத பூஜையை, ராஜ்நாத் சிங் நடாத்தினார்.

இந்நிலையில் விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங், ‘இந்திய வான்வெளி ஆதிக்கத்தை ரஃபேல் போர் விமானம் அதிகரிக்கும்’ என்று கூறினார்.

நான்கு ரஃபேல் விமானங்கள் கொண்ட முதல் தொகுதி 2020 ஆம் ஆண்டில் இந்தியாவை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 36 ரஃபேல் போர் விமானங்களும் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்தியாவை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமானப்படைக்கு, 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!