ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், நிலம் தாழிறக்கம்!!

நுவரெலியாவில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ள நிலையில், அப்பகுதியினுடான போக்குவரத்து, ஒருவழிப் போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மதியம் முதல் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த நிலத்தில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக, ஒரு வழியில் மாத்திரமே வாகனங்கள் பயணிக்க கூடியதாக உள்ளது.

பள்ளமான பகுதியில் வீதி கீழிறங்கியுள்ள நிலையில், வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என, வட்டவளை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மேலும் பல இடங்களிலும் சிறிய மண் சரிவுகள் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!