தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : மட்டு, சித்தி விபரம்!!

2019 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 273 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 வலயத்திலும் 9 ஆயிரத்து 753 மாணாவர்கள் தோற்றி இருந்த நிலையில், பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் ஆயிரத்து 273 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின், மட்டக்களப்பு நகர் பாடசாலைகளான கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 195 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 66 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 136 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 60 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் 130 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 52 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

புனித மிக்கேல் கல்லூரியில் 163 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 53 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 152 மாணவர்கள் தோற்றிய நிலையில், 29 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 273 மாணவர்களும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 399 மாணவர்களும், இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் ஆயிரத்து 662, திருகோணமலை மாவட்டத்தில் 783, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 273 மாணவர்களுமாக, மொத்தமாக 3 ஆயிரத்து 718 மாணவர்கள், கிழக்கு மாகாணத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!