நீராவியடி சம்பவம் தொடர்பில் விசாரணை!!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகப் பகுதியில், தேரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில், இன்று விசாரணை நடைபெற்றது.


முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில், நீதிமன்றத்தின் கட்டளையை மீறி பௌத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை மற்றும் பொது மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி தொடர்பில், வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில், கடந்த மாதம் 25 ஆம் திகதி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பிள்ளையார் ஆலய நிர்வாகிகளும், தமிழர் மரபுரிமை பேரவையினரும் இணைந்து, முறைப்பாட்டை மேற்கொண்டனர்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை, வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில், இன்று இடம்பெற்றது.

இதன் போது, முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஆலயம் சார்பில் சட்டத்தரணி ந.அனிஸ், ஆலய நிர்வாகத்தினர் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த நிலையில், விசாரணைகளின் பின்னர், முறைப்பாடு தொடர்பில் முன்னிலையான மக்களும், சட்டத்தரணியும் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.

குறித்த விசாரணையில் ஆலயத்தின் நிர்வாகம் சார்பில் முன்னிலையாயிருந்த சட்டதரணி ந.அனிஸ் கருத்து தெரிவித்த போது…

குறித்த சம்பவத்தில் நீதி மன்றின் கட்டளை மீறப்பட்டுள்ளது என்று எம்மால் தெரிவிக்கபட்டிருந்தது. அதனை பொலிஸ்தரப்பினர் ஏற்றுகொண்டுள்ளனர்.

அன்றய தினம் நீதி மன்றின் கட்டளையை அமுல்படுத்துவதை விட இன முரன்பாடு ஏற்படுவதை தவிர்பதில் கவனம் செலுத்தியதாகவும் அவர்களால் சொல்லபட்டது.

அத்துடன் நீதி மன்ற கட்டளையை மீறியவர்களிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அன்றயதினம் வருகைதந்திருந்த பௌத்த தேர்ர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாகவும் பொலிசார் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆலயத்தின் நிர்வாகத்தினர்…

குறித்த சம்பவத்தில் மக்கள் மீதான தாக்குதலை தாம் மேற்கொள்ளவில்லை என்றும் தங்களுக்கும் அதற்கும் பொறுப்பல்ல என்பதை பொலிசார் ஆணிதரமாக தெரிவித்தார்கள்.

எனினும் தாக்கபட்ட சம்பவங்கள் தொடர்பாக ஒளிப்பதிவு காட்சிகளை உங்களுக்கு சமர்ப்பித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என எம்மால் கேட்கபட்டது, தகுந்த ஆதாரங்களை வழங்கினால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

அத்துடன் நீதி மன்ற கட்டளையை மீறியதை பொலிசார் ஏற்றுகொண்டுள்ளனர். எனினும் அவர்கள் நழுவிச்செல்லும் போக்கை காணக்கூடியதாக இருந்தது.

குறித்த கட்டளையை மீறுவதற்கு பௌத்த பிக்குகளின் மேலாதிக்கம் தான் காரணம் எனவும், அவர்களது செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலே குறித்த நீதி மன்றகட்டளை மீறப்பட்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.

அத்துடன் 12.30 மணிக்கு வழங்கபட்ட ஒரு கட்டளைக்கு அமைவாக ஒரு பத்துநிமிடத்திலே ஏற்கனவே தயார் செய்யபட்டருந்த எரிப்புநடவடிக்கைகளை உடனடியாக அவர்கள் மேற்கொண்டதால் எம்மால் அதனை தடுக்க முடியாமல் போனதாகவும் பொலிசாரால் தெரிவிக்கபட்டது.

எனினும் நாம் அதனை மறுத்ததுடன், காலை 10 மணியளவிலேயே ஞானசாரதேரர் தலைமையிலான பிக்குகள் மற்றும் சிங்கள மக்களால் எரிப்புநடவடிக்கைகள் ஏற்பாடு செய்யபட்டு அது நிறைவேற்றபடுகின்ற கட்டத்தில் தான் நீதிமன்ற தீர்ப்பு வந்ததை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

பொலிசாரின் பக்க சார்பான நடவடிக்கையினாலே தான் இது நடைபெற்றது. எரிப்பு நடவடிக்கைகளை சிங்கள மக்களும், பௌத்த தேர்ர்களும் மேற்கொள்ளும் போது காலை 10 மணி தொடக்கம்12.30 மணி வரை பொலிசார் வேடிக்கை பார்த்துகொண்டிருந்ததுடன்,அவர்களிற்கு உதவிகளையும் வழங்கியிருந்தனர்.

நீதி மன்ற தீர்ப்பு வரும்வரை முடிவினை எடுக்க கூடாது என்று சொல்லி தடுக்காமல்,கைகட்டிநின்ற போலிசாரின் நடவடிக்கை தொடர்பாக நாம் மனித உரிமை ஆணைக்குழுவில் சுட்டிகாட்டினோம் அதனை அவர்கள் ஏற்றுகொண்டார்கள்.

இதேவேளை சட்டத்தை மீறியவர்கள் தொடர்பாக நடவடிக்கையினை எடுப்பதாக பொலிசார் தெரிவித்தனர். எனினும் சட்டத்தை மீறிய உங்களிற்கு அவர்களை விசாரிப்பதற்கு அருகதையில்லை எனவே வேறு மாவட்டங்களில் உள்ள

பொலிஸ் அதிகாரிகள், குறித்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் தெரிவித்திருந்தோம் என தெரிவித்தார்.

இதேவேளை, நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில், 3 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றமைக்கு அமைவாக, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக, மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.பிரியதர்சன தெரிவித்தார்.

குறிப்பாக ஆலயவளாகத்தில் பிக்குவின் உடலை எரித்தமை, பொலிசார் பொதுமக்களிற்கு தாக்கியமை, நீதி மன்ற தீர்பை அமுல்படுத்தாமை, போன்ற முறைப்பாடுகள் கிடைக்கபெற்றிருந்தது.

அது தொடர்பான விசாரணைக்கு இரு தரப்பும் இன்று அழைக்கபட்டனர்.விசாரணையின் பிரகாரம் நீதிமன்ற தீர்ப்பு அமுல்படுத்தபடாமையை பொலிசார் ஏற்றுக்கொண்டனர். அத்துடன் பொதுமக்களை பொலிசார் தாக்கியமை

தொடர்பாக ஆதாரங்களை சமர்பித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன், குறித்த சம்பவத்தில் சட்டவிரோதமாக செயற்பட்டவர்களிற்க்கு நீதி மன்ற உத்தரவுடன், மேலதிக நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் எமக்கு தெரிவித்துள்ளனர். என குறிப்பிட்டார்.

இதேவேளை, நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில், 3 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றமைக்கு அமைவாக, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக, மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.பிரியதர்சன தெரிவித்தார்.

குறிப்பாக ஆலயவளாகத்தில் பிக்குவின் உடலை எரித்தமை, பொலிசார் பொதுமக்களிற்கு தாக்கியமை, நீதி மன்ற தீர்பை அமுல்படுத்தாமை, போன்ற முறைப்பாடுகள் கிடைக்கபெற்றிருந்தது.

அது தொடர்பான விசாரணைக்கு இரு தரப்பும் இன்று அழைக்கபட்டனர்.விசாரணையின் பிரகாரம் நீதிமன்ற தீர்ப்பு அமுல்படுத்தபடாமையை பொலிசார் ஏற்றுக்கொண்டனர். அத்துடன் பொதுமக்களை பொலிசார் தாக்கியமை தொடர்பாக ஆதாரங்களை சமர்பித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன், குறித்த சம்பவத்தில் சட்டவிரோதமாக செயற்பட்டவர்களிற்க்கு நீதி மன்ற உத்தரவுடன், மேலதிக நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் எமக்கு தெரிவித்துள்ளனர். என தெரிவித்தார்.(சி)

(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!