வேட்பாளர்களிடம் பெப்ரல் அமைப்பு முக்கிய கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்களின் போட்டியிடப்போகும் வேட்பாளர்களும் , அந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் நாட்டின் சமாதானத்தை பாதுகாக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறு  பெப்ரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் விளங்குகின்றது.

அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக எதிர்வரும் தேர்தல் பிரச்சாரங்களில் அதிக போட்டி தன்மையையும் காணக்கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டிருக்கும் பெப்ரல் அமைப்பு  மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாம் தற்போது முகம்கொடுக்கப் போவது நாட்டின் தலைவர் , நிறைவேற்று அதிகாரத்தின் தலைவர் மற்றும் நாட்டின் முதல் குடிமகனை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்பதினால் இந்த பதவியின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் செயற்பட வேண்டும்.

இதனால் அனைத்து வேட்பாளர்களும் சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். அதற்கமைய இலங்கையின் அரியல் அமைப்பையும் மற்றும் 1981 ஆம் இலக்க 15 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் சட்டங்களையும் , ஏனைய சட்டதிட்டங்களையும் மீறும் வகையில் செயற்படாமை.

தேர்தல் பிரச்சாரங்களின் போது பொலிதீன் பவனையை கட்டுப்படுத்தி சூழல் பாதுகாப்பை நிலைநாட்டும் வகையில் செயற்படுதல். தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்படும் ஆலோசனைகள் மற்றும் அறிவுருத்தல்களுக்கமைய செயற்படுதல்.

தேர்தல் செயற்பாட்டுகளின் போது சட்டவிரோதமான செயற்பாடுகளை அல்லது நீதியற்ற செயற்பாடுகளை மேற்கொள்வதை தவிர்த்தல். வன்முறைகளை எதிர்த்தல் , வாக்குகளை பெருவதற்காக தேர்தல் ஊழல் செயற்பாடுகளை மேற்கொள்வதையோ அல்லது வாக்களர்களுக்கு இலஞ்சம் கொடுப்பதையோ தவிர்த்தல்.

மக்கள் விருப்பில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருத்தல். இன ,மத பேதங்களை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை தவிர்த்தல் , தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரச சொத்துக்களை முறையற்று பயன்படுத்துவதை தவிர்த்தல் மற்றும் சிறந்த அரசியல் கலாச்சரத்தை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் செயற்படல்.

அதேவேளை அனைத்து வேட்பாளர்களும் தாம் ஜனாதிபதி பதவியை வகிக்க தகுதியானவர் என்பதை தமது தேர்தல் பிரச்சார செயற்பாடுகளின் ஊடாக வெளிப்படுத்துமாறும் பெப்பரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!