வவுனியாவில், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பு     

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக, பொது மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, வேப்பங்குளம், சின்னங்குளம், ஒமந்தை போன்ற, வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்லவில்லை.

இதன் காரணமாக, தமது பல்வேறு தேவைகளை நிறைவேற்றச் சென்ற மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!