அம்பாறையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!

 

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுகுட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நண்பகல் முதல் மர்மமான முறையில் மாயமாகிய பெண் வீட்டில் பின்புறத்தில் இருந்த குளியல் அறையில் இருந்து சடலமாக திருக்கோவில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளார்

குறித்த பெண் திருக்கோவில் விநாயகபுரம் 02 பாடசாலை பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில்  தனது மகளின் ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார்.

திங்கட்கிழமை காலை குறித்த பெண் அயல் வீட்டுக்கு சென்றிருந்த போது திடீரென தனது வீட்டில் நாய் குரைப்பதைக் கேட்டு வீட்டைப் பார்ப்பதற்காக கூறிவிட்டு தனது வீட்டுக்கு சென்றததாக அயல் வீட்டார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வயல் வேலை முடித்து வீடு திரும்பிய பெண்ணின் கணவரான சண்முகநாதன் கிருபைராசா வீட்டு மண்டபத்தில் குழந்தை தனியாக அழுது கொண்டு இருப்பதைப் கண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு மனைவினை அயல் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளார் ஆனால் மனைவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் திருக்கோவில் பொலிசாருக்கு கணவரால்  வழங்கப்பட்ட தகவலயடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவில் பொலிசார் மற்றும் உளவுத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்ததுடன்,  பொலிசாரும், குடும்பத்தினரும் பெண்ணைத் தேடி வந்தனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீர அவர்களின் தலைமையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று காலை வீட்டின் பின்புறமாக கட்டப்பட்டு கிடந்த குளியல் அறையில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டது .

இதனைத் தொடர்ந்து மாவட்ட நீதவான் நீதிபதியான பி.சிவகுமார் அவர்களின் பிரசன்னத்துடன் குறித்த பெண்ணின் சடலம் பொலிசாரினால் தோண்டி எடுக்கப்பட்டது.

குறித்த பெண்ணின் சடலத்தின் முகத்தில் இரத்த கசிவுகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து குற்றத் தடயாய்வு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தடயங்கள் தொடர்பான பரிசோதனைகள்மேற்கொண்டு வந்த நிலையில், திருக்கோவில் பொலிசார் இவ் சம்வம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை செய்த வருகின்றனர்.

குறித்த பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு சலலமாக மீட்கப்பவர் திருக்கோவில் விநாயகபுரம்-02 பாடசாலை வீதியைச் சேர்ந்த திருமதி கிருபைராஜா கனகம்மா வயது 53 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!