‘முல்லை. நீராவியடி விவகாரம்:நீதி நிலைநாட்டப்படவில்லை:சம்பந்தன்       

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் போது, நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டவர்கள் மீது, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று, பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மலை விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை மீறியோரை தடுக்காமல், அதனை அனுமதித்த பாதுகாப்பு தரப்பினர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்தரணிகள் தாக்கப்பட்டனர். பொலிசாரும் அங்கே இருந்தனர். எஸ்.எஸ்.பி யும் அங்கே கடமையில் இருந்தார்.

ஆனால் அவர்களும் ஒன்றும் செய்யவில்லை.சமூக உறுப்பினர்களும் அங்கு இருந்தார்கள், அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.அங்கு வண. கல்கொட, ஞானசார தேரர் இருந்தார்.

ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைச்சாலையில் இருந்தவர்.அவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பெயரில் 23-05-2019 இல் விடுவிக்கப்பட்டார்.என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!