நவராத்திரி விழா   

மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஸ்ரீ குருந்தையடி சித்திவிநாயகர் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வும், நவராத்திரி விழாவும் நேற்று நடைபெற்றது.

அறநெறி பாடசாலை அதிபர் வி.உதயசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நவராத்திரியை பிரதிபலிக்கும் மாணவர்களின் நாடகம், நடனம், பேச்சு உள்ளிட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இங்கு நடைபெற்ற அறநெறி தொடர்பான நிகழ்வுகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஆலய பிரதம குரு சிவாச்சாரியார் சிவஸ்ரீ சிவராஜ குருக்கள், அறநெறி போசகர்களான மங்கையற்கரசி அம்மையார், பேரின்பராசா மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!