மட்டு காத்தான்குடியில்,தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று இரவு நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் எம்.முஸ்தபா தலைமையில் அவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரை வெற்றி பெறச் செய்யும் வகையில் காத்தான்குடியில் முன்னெடுக்கப்படவுள்ள தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் இக் கலந்துரையாடலில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!