மட்டு, காத்தான்குடி, விசேட தேவையுடையோர் பாடசாலையின் சிறுவர் தின விழா   

மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள ஸாஹிறா விசேட தேவையுடையோர் பாடசாலையில் சிறுவர் தின விழா மற்றும் ஆசிரியர் தின விழா என்பன நடைபெற்றன.

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் காத்தான்குடியிலுள்ள ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில், காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஸி.எம்.ஹக்கீம், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.யு.எம்.இஸ்மாயில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார், கமிட் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் எம்.காண்டீபன் உட்பட அதிகாரிகள் முக்கியஸதர்கள் பிரமுகர்கள் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது ஸாஹிறா விசேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றது.

அதிபர்,ஆசிரியர்கள் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!