மட்டு, பிள்ளையாரடி பகுதியில், வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று மீட்பு   

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிள்ளையாரடி பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற மருத்துவ பீடத்திற்கான கட்டட தொகுதி பகுதியில், அகழ்வு நடவடிக்கையின் போது வெடிக்காத நிலையில் சிறிய ரக மோட்டார் குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை கட்டிட நிர்மாண வேலைகளுக்காக அகழ்வு நடவடிக்கை மேற்கொண்ட போது அங்கு பணியாற்றுகின்றவர்களினால் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு பொலிசாருக்கு தகவலை வழங்கியுள்ளதாக கட்டட தொகுதியில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் தெரிவித்தார்.

தகவலை அறிந்து குறித்த இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.கே.எட்டியாராச்சி வெடிகுண்டினை பார்வையிட்டார்.

வெடிக்காத நிலையில் காணப்பட்ட சிறிய ரக மோட்டார் குண்டானது கடந்த யுத்த காலத்தில் பயன்படுத்தபட்ட மோட்டார் குண்டாக இருக்கலாம் என பொலிஸ் உத்தியோகத்தர்கள், தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட குறித்த மோட்டார் குண்டு தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!