மலையகத்தில் புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன    

புகையிரத தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து, மலையகத்திற்கான புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

கடந்த 12 நாட்களாக, புகையிரத தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் நேற்று இரவு கைவிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, சம்பள நிர்ணய சபை தலைவர் ஆகியோருடன், புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே, குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று காலையில் இருந்து வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!