இவ்வாரத்தின் பாராளுமன்ற அமர்வு, 1 நாள் அமர்வாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது   

எல்பிட்டிய பிரதேசபைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளின், நாள் எண்ணிக்கை 1ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மட்டுப்படுத்தப்பட்ட இவ்வாரத்தின் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

மதியம் 1 மணியளவில், பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!