தேர்தல் தொடர்பில், தமிழ்த் தேசியக் கட்சிகள் இரண்டாம் கட்ட பேச்சு!!

ஐனாதிபதி தேர்தல் தொடர்பில், தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த முடிவை எடுக்கும் இரண்டாம் கட்டச் சந்திப்பு, யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடத்தப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து நடாத்திய கலந்துரையாடலில், பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதில், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விநோனோதராதலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், தமிழ் மக்கள் பேரவையினர், யாழ். பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!