மட்டு, உன்னிச்சையில் காட்டு யானைகள் அட்டகாசம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை இராஜதுரை கிராமத்தில் நேற்று இரவு காட்டுயானைகள் உட்புகுந்து குடிமக்கள் இருவரின் சொத்துக்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

இப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யானை தடுப்பு மின்சார வேலியினைத் தாண்டிவந்த காட்டுயானைகள் உன்னிச்சை ராஜதுரை கிராமத்திலுள்ள சிறிய கடை ஒன்றினையும் வீடு ஒன்றினையும் தாக்கி சேதப்படுத்திச் சென்றுள்ளது.

காட்டு யானையினால் குறித்த வீட்டின் யன்னல் உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த நெல், கச்சான் போன்றவற்றை தின்று சேதப்படுத்திச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை சிறிய முதலீட்டினைக் கொண்டு ஆரம்பித்த தமது சிறிய கடை யானையின் தாக்குதலில் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இச் சேதம் தொடர்பாக வீட்டு உரிமையாளரும் கடை உரிமையாளரும் கிராம சேவையாளரிடம், பொலிஸாரிடமும் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச் சேதங்களை ஆயித்தியமலை பொலிஸ் பார்வையிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இச் சேதத்திற்கு தங்களுக்கு உரிய அரச அதிகாரிகள் நஸ்டஈட்டை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!