நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சஜித்!!

தொழில்நுட்ப வளர்ச்சியில் புத்துயிர் பெற்ற தாய் நாட்டை கட்டியெழுப்ப, நாம் அனைவரும் கைகோர்ப்போம் என, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று, வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்பாக கூடியிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச, அவருடைய தாயாரான ஹேமா பிரேமதாச, அமைச்சர்களான மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜுபுர் ரஹூமான், கபீர் ஹசீம் ஆகியோர் புடையசூழ ஆதரவாளர்கள் இருந்த இடத்திற்கு சென்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!