ஜனாதிபதி – புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று முற்பகல் னாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பொது மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்காத வகையில், தமது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அனைத்து தொழிற்சங்கங்களினதும் பொறுப்பாகும் என, ஜனாதிபதி தெரிவித்தார்.

வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு, புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தி, அவற்றுக்கு வழங்க முடியுமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு, ஜனாதிபதி என்ற வகையில் தான் தலையீடு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

எந்தவொரு பிரச்சினைக்கும், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பொது மக்களை அசௌகரியத்திற்குள்ளாக்க கூடாதென்றும், ஜனாதிபதி தை;ரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!