திசைகாட்டியின் உதவியுடன் பயணிக்க போகிறார் அனுர!!

மாற்றத்தை நோக்கிய பயணத்தில், மக்களை கைகோர்க்குமாறு, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

‘மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதே எமது இலக்காகும். அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

நவம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னரும், நாட்டை சீரழிக்கும் ஆட்சி தொடர வேண்டுமா அல்லது மாற்றம் வேண்டுமா என்பது மக்கள் கைகளிலேயே இருக்கிறது.

மாற்றத்தை ஏற்படுத்த, தேசிய மக்கள் சக்தியாக நாம் தயாராக இருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலில் ‘திசைகாட்டி’ சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம்.

திசைக்காட்டிதான் பெரும்பாலானவர்களுக்கு சரியான வழியைக் காண்பிக்கிறது. மாற்றத்தை நோக்கிய இந்த பயணத்தில், மக்களை எம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்’ என தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!