அமெரிக்காவின் உதவியில், கண்ணி வெடி அகற்றும் பணி முகமாலையில்!!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை பகுதியில், அமெரிக்க நிதியுதவியுடன் டாஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணிகளை, அமெரிக்க நாட்டின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

முகமாலை மற்றும் அரசர் கேணி ஆகிய பகுதிகளில், சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவியுடன், டாஸ் மனித நேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால், நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முகமாலை பகுதியில் அமெரிக்க நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணிகளை, அமெரிக்க நாட்டின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

முகமாலைப் பகுதிக்குச் சென்ற குழுவினர், நிலைமைகள் தொடர்பிலும், வெடி பொருட்களை அகற்றும் பணிகளின் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், கண்ணி வெடி அகற்றும் பணிகளை நேரடியாக பார்வையிட்டுள்ளனர்.

தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகள், அரச காணிகள் என்பன உள்ளடங்கலாக, வெடி பொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!