சன்னஸ் பத்திரம் வழங்கும் புண்ணிய நிகழ்வு!!

சியனே கோரலையின் உப பிரதான சங்கநாயக்கர் பதவியை பெற்ற, பிலிக்குத்துவ ரஜமகா விகாரையின் பஹல யாகொட ஸ்ரீ சுகத்தநந்தாராம புராண விகாரையின், வண. ஸ்ரீ ராகுல தேரருக்கு சன்னஸ் பத்திரம் வழங்கும் புண்ணிய நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

பஹல யாகொட ஸ்ரீ சுகத்தநந்தாராம புராண விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வில், ஜனாதிபதி கலந்துகொண்டார்.

சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விகாரையின் அனுநாயக்கர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி நாயக்க தேரரால், உப பிரதான சங்கநாயக்க தேரருக்கு சன்னஸ் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி தை;ரிபால சிறிசேனவினால், தேரருக்கு சான்றுப்பத்திரம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக தேரரால் முன்னெடுக்கப்படும் பணிகளை பாராட்டும் வகையில், மல்வத்து விகாரையினால் ‘சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ குணரத்தன பஞ்ஞாவாச’ எனும் கௌரவ பெயர்களுடன், சியனே கோரலையின் உப பிரதான சங்கநாயக்கர் பதவி ஸ்ரீ ராகுல தேரருக்கு வழங்கப்பட்டது.

தேரரின் வழிகாட்டல்களுக்கமைய, தொண்டு சபையினால் விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய புனித சின்னங்களை பிரதிஸ்டை செய்யும் மண்டபத்தை, ஜனாதிபதி திறந்து வைத்தார்.

நிகழ்வில், ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிக்காயவின் நெதகமுவே விஜய மைத்ரி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அஜித் பஸ்நாயக்க ஆகியோர் உள்ளிட்ட பிரதேசத்தின் பக்தர்கள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!