மட்டு, மாவட்ட செயலக பணியாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை!

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான, தனி நபர் ஆளுமை மற்றும் இயலுமை வலுப்படுத்தல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறை, இன்று நடைபெற்றது.

அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வில், பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன், இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள பயிற்சிக்கான வளவாளர் வைத்தியர் ராஜாராம் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!